எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Wednesday, March 2, 2011

மரணம் வரும் வழி யாரறிவார்?

போன ஞாயிற்றுக்கிழமை (27.2.11) மூலிகை வைத்தியம் விஷயமா ஒருவரை பார்க்க கிளம்பினேன். நான் வசிக்கும் மாதவரம் பகுதியிலிருந்து முகப்பேர் செல்ல நூறடி சாலை வழியாக சென்றேன். ரெட்டேரியை தாண்டி டி.வி.எஸ். எதிரே சென்றபோது சரசரவென்று சத்தம். என்னவென்று பார்த்தால் பட்டம் (காற்றாடி) ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அடுத்த நிமிடம் என் கையில் நூல் சிக்கியது. உடனே வண்டியை (பைக்) ஓரங்கட்டி நூலை கையில் சுற்றி ரோட்டோரமாக எறிந்தேன். நூல் கையில் பட்டபோது லேசாக வலித்தது. அதுவே கழுத்தில் பட்டிருந்தால் என்னவாகியிருக்கும்? மாஞ்சாக்கயிறுதான் கழுத்தை அறுக்கும், நூல் அறுக்காது என்று சொல்லமுடியாது. சில நூல்கள் கொஞ்சம் ஸ்ட்ராங்க்காகவே இருக்கின்றன. எனக்கு நல்ல நேரம் இருந்ததனால எனக்கு ஒண்ணும் ஆகலை.
சரி அது ஒருபுறம் இருக்கட்டும். சம்பவம் நடந்த இடத்தை தாண்டி பாலம் உள்ளது. அதன் வழியாக சென்றால் அடுத்து திருமங்கலம். அங்கே போலீஸ் ரோந்து வாகனம் நின்று கொண்டிருந்தது. என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நடந்த சம்பவத்தை சொன்னேன். அய்யய்யோ, அப்பிடியா கொஞ்சம்னா கழுத்தை அறுத்திருக்குமே என்று சொன்ன அந்த (பொறுப்புமிக்க) போலீஸ் வழக்கம்போல...... சார் அது எங்க லிமிட் கிடையாது என்றார்களே பார்க்கலாம். உடனே நான், நீங்க நினைச்சா சம்பந்தப்பட்ட போலீசுக்கு சொல்லலாம். இதுபோன்று பட்டம் விடுவதை தடுக்கலாமே என்று கூறிவிட்டு என் வேலையை செய்ய சென்றுவிட்டேன்.
இங்கே நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், மரணம் எப்போது? யாருக்கு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால் சில நேரங்களில் சிலவற்றை தடுக்க இயலுமே! யாரோ விட்ட பட்டத்தின் நூலில் சிக்கி வீணாக உயிரை விட வேண்டுமா? இந்த விஷயம் எல்லோரும் சிந்திக்க வேண்டியது.