எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Sunday, March 23, 2014

வெயில் காலம் வரப்போகுது அதனால அதுக்கு ஏத்த டிப்ஸ் கொடுங்கன்னு ஒருத்தர் சொன்னார். அவருக்காக மட்டுமில்லை, ஒட்டுமொத்த மக்களுக்காகவும் எழுதுறேன். படிச்சி பலன் அடையுங்க. மே மாசம் வந்தாலே எல்லோருக்கும் கொண்டாட்டந்தான். சொந்தம் பந்தம்னு கூடிக்குலாவி இருக்குற நேரத்துல சிலபேர் ஸ்டைல் பண்றது, ஹேர்ஸ்டைல் மாத்துறதுன்னு இருப்பாங்க. இன்னும் சிலபேர் கை - கால்ல எல்லாம் மருதாணி வச்சி அழகு பார்ப்பாங்க... மருதாணி குளிர்ச்சியூட்டக்கூடியது. அதனாலதான் வெயில் காலங்கள்ல சூட்டை தணிக்கிறதுக்காக மருதாணி பூசுவாங்க. ஆனா இப்போ மருதாணி போடுறதெல்லாம் குறைஞ்சிபோய் மெகந்தி கலாச்சாரம் தலைதூக்கிட்டு. இயற்கையான மருதாணிக்கும், செயற்கை கலவையான மெகந்தியை கையில போடுறதால என்னென்னவோ பக்கவிளைவெல்லாம் வந்து மக்களை பாடாப்படுத்துறது பலபேருக்கு தெரியுறதில்லை. மழை ஒழுங்கா பெய்யுறதில்ல, ஆனா வெயில் மட்டும் வெளுத்து வாங்குது. பருவ காலங்கள் முன்ன மாதிரி இல்லை, ஏறுக்கு மாறா... ஏட்டிக்கு போட்டியா போய்க்கிட்டு இருக்கு. சரி விஷயத்துக்கு வருவோம். வெயில் இப்பவே வறுத்தெடுக்கத் தொடங்கிட்டு. ஏற்கனவே வெயில் காலங்கள்ல அம்மை, வேர்க்குரு, கொப்புளம், வயித்துக்கடுப்பு, வயித்துவலினு வந்து பாடாப்படுத்தும். ஆனா இப்போ புதுசு புதுசா... தினுசு தினுசா நோய்கள் வந்து மனுசன ஒருவழி பண்ணிட்டு போயிருது. அறிவியல் என்னதான் வளர்ச்சி அடைஞ்சாலும் இந்த நோய்களை கண்டுபிடிக்க முடியலை. இந்த நோய்கள் வர்றதுக்கு ரெண்டே காரணந்தான். ஒண்ணு உடல் உழைப்பு குறைஞ்சு போனது, ரெண்டாவது நாம சாப்பிடுற சாப்பாடு. சரி நேரடியா விஷயத்துக்கு வருவோமா?... வறுத்தெடுக்கும் கோடை வெயில்ல இருந்து நம்மளை காத்துக்கிடணும்னா கீழே சொல்லப்பட்டிருக்கிறதல சிலதை மட்டும் பின்பற்றினாலே போதும், கைமேல் பலன். கோடை வர்றதுக்கு முன்பே தர்பூசணி விற்பனைக்கு வந்துட்டு. விலை குறைவா உள்ள இந்த தர்பூசணியை சாப்பிட்டா உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கிறதோட தாகம் தணியும். என்ன ஒண்ணு அடிக்கடி சிறுநீர் போகும், அவ்வளவுதான். அதேபோல எல்லா காலத்துலயும் தாராளமா கிடைக்கக்கூடிய இளநீரை குடிக்கலாம். இதுவும் சூட்டை தணிக்கும். ஆனா என்ன... விலைதான் விர்ருன்னு தென்னைமரம் மாதிரி ஏறிப்போச்சு. இளநீர் குடிக்கிறதுல தப்பில்லை, கடைக்குப்போனா எளநி வியாபாரி, ‘வழுக்கையா, தண்ணியா’ன்னு கேப்பாரு. சிலபேரு வழுக்கையா பாத்து போடுங்கன்னு வாங்கி ‘மடக் மடக்’குனு குடிப்போம். லேசான வழுக்கை ருசியாத்தான் இருக்கும். ஆனா இப்பிடி தொடர்ந்து வழுக்கையா வாங்கி சாப்பிட்டா காலப்போக்குல அது பசியைக்குறைச்சி குன்மம்னு சொல்லக்கூடிய வயித்து நோய் வர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால எப்பவுமே புதுசா பறிச்ச இளநீரை வாங்கி குடிச்சா உடம்புக்கு நல்லது, அதாவது வெறும் தண்ணியா உள்ள இளநீரா பார்த்து வாங்கி குடிங்க. கூல் கூல்..! வெயில் காலத்துல வீட்டுக்கு வீடு மண்பானையில தண்ணி ஊத்தி வச்சி குடிப்போம், நல்லதுதான். சும்மா வெறுமனே தண்ணியை ஊத்தாம காய்ச்சி ஆற வச்ச தண்ணியை மண்பானையில ஊத்தி வச்சி குடிக்கலாம். தண்ணியை ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு நிமிஷம். தண்ணி கொதிக்கும்போது கொஞ்சம் சீரகத்தை அள்ளிப்போடுங்க. உடம்புக்கு குளிர்ச்சி தர்றதோட உள்உறுப்புகள் சரியாகும். மண்பானையில வெட்டிவேரை ஊறப்போட்டு குடிச்சாலும் உடம்புக்கு குளிர்ச்சி கிடைக்கும். இது நாட்டு மருந்துக்கடைகள்ல கிடைக்கும். ஜன்னல் ஓரங்கள்ல வெட்டிவேர்ல செஞ்ச தட்டியை பயன்படுத்தினா குளிர்ச்சியான காத்து கிடைக்குறதோட நல்ல வாசமா இருக்கும். வெட்டிவேர் மாதிரியே நன்னாரி வேரும் நல்ல குளிர்ச்சி தரக்கூடியது. இதை வாங்கி இடிச்சி தண்ணியில போட்டு கொதிக்க வச்சி சூடு ஆறுன உடனே சீனி (சர்க்கரை) சேர்த்து குடிச்சா ஒண்ணுக்கு போகும்போது வரக்கூடிய எரிச்சல் சரியாகும். கடைகள்ல விற்கக்கூடிய நன்னாரி சர்பத் குடிக்க டேஸ்டா இருக்கலாம், ஆனா சுகம் கிடைக்காது. இது எந்தவித கலப்பு இல்லாத சூப்பர் சர்பத். கோடை காலத்துல புழுக்கம் வர்றது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சிலபேருக்கு எரிச்சல், கோபம், படபடப்பு, குழப்பம் வரும். சிலபேருக்கு தலைசுத்தலும், மயக்கமும் வரும். இந்த மாதிரி பிரச்னை வந்தா செம்பருத்திப்பூ சர்பத் குடிச்சா நல்லது. அதென்ன செம்பருத்தி பூ சர்பத்துன்னு கேக்குறீங்களா? எங்க ஊர்ப்பக்கம் தடியங்காய்னு சொல்வாங்க, அதோட பேரு கல்யாணபூசணிக்காய். திருஷ்டிக்கு உடைப்பாங்களே, அதே காய்தான். அதுல ஒரு ஓட்டை போட்டு 50 இல்லைனா 100 செம்பருத்திபூவை உள்ள திணிச்சி மூடி வச்சிரணும். மறுநாள் அதை உடைச்சி சதை பகுதியை எடுத்து சாறு பிழிஞ்சி சம அளவு சீனி (சர்க்கரை) சேர்த்து தேன் பதத்துல காய்ச்சி ஆற வச்சா செம்பருத்தி பூ சர்பத் ரெடி. இதுல 4 ஸ்பூன் சர்பத் 4 ஸ்பூன் தண்ணி சேர்த்து குடிச்சா படபடப்புல தொடங்கி ஆயாசம், கண் எரிச்சல்னு எல்லாம் ஓடிப்போயிரும். இதுபோக வெயில் காலத்துல கிடைக்கக்கூடிய நொங்கு (பனைநுங்கு), எலுமிச்சை ஜூஸ் சாப்பிடறதால பிரச்னைகள்ல இருந்து தப்பிக்கலாம். எலுமிச்சை ஜூஸை தண்ணி, சீனி சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து குடிங்க. அதிகமா புளிப்பு இருந்தா அமிலம் இருக்குன்னு அர்த்தம். அது உடம்புக்கு அவ்வளவு நல்லதில்லை. மத்தபடி வெள்ளரிப்பிஞ்சு, வெள்ளரிப்பழம், பானகம் குடிக்கலாம். பானகம் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேருக்கு தெரியாது. புளியை தண்ணியில ஊறப்போடுங்க. ஊறின தண்ணியோட கொஞ்சம் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து கரைச்சி குடியுங்க. வயித்துக்கடுப்பு, சொட்டு மூத்திரம்னு அது தொடர்பான எல்லா கோளாறுகளும் சரியாயிரும். சூடும் தணியும். அந்த காலத்துல சனிக்கிழமையானா எண்ணெய் தேய்ச்சி குளிப்பாங்க. இப்போ அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு சொல்லி சமாளிக்கிறாங்க. உச்சந்தலையில இருந்து உள்ளங்கால் வரை குளிரக்குளிர நல்லெண்ணெய் தேய்ச்சிட்டு ஒரு மணி நேரம் கழிச்சி குளிச்சி பாருங்க, அப்பிடியே சொர்க்க லோகம் தெரியும். மத்தபடி, முளைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, வல்லாரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, கானாம்வாழை மாதிரி கீரைகளை உணவுல சேர்த்துக்கிட்டா சூடு தணியுறதோட வேற சில கோளாறுகளும் சரியாகும். கத்தாழை ஜூஸ், வெண்டைக்காய் பொரியல், பூசணி, புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய்னு ஏகப்பட்ட காய்கறிகள் இருக்கு, அதையெல்லாம் சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டீங்கன்னா வெயில் நம்மை நெருங்காது. முக்கியமா இந்த வெயில் காலத்துலதான் அம்மை நோய் வரும். நோய் வர்றதுக்கு முன்பே உங்களை காத்துக்கிடணும்னா முத்தின கத்தரிக்காயை வாங்கிட்டு வந்து தீயில சுட்டு மிளகாய்வத்தலையும் (காய்ந்த மிளகாய்) சுட்டு, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நல்லா பிசைஞ்சு சாப்பிடுங்க. நோய் எட்டிப்பாக்காது.

Saturday, March 15, 2014


பேயை விரட்டுமா வேப்ப இலை? ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு வேப்ப மரம் இருக்கும். ஆனால் அதன் பலனை அறியாமல் நமக்கு வரும் நோய்களுக்காக எங்கெங்கோ சென்று காசை கரியாக்குவதோடு நம் உடம்பையும் கெடுத்துக்கொள்கிறோம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பார்கள். ஆலம் விழுதைக்கொண்டு பல் துலக்குவதுபோல வேப்ப மரத்தின் குச்சியைக்கொண்டும் பல் துலக்குவார்கள். இதன்மூலம் பல் கோளாறுகள் நீங்குவதோடு பின்னாட்களில் பல்லில் பிரச்சினைகள் எதுவும் வராமல் தடுக்கப்படும். பேய் பிடித்தவர்களின் தலையில் வேப்ப இலையைக்கொண்டு அடிப்பார்கள். நாமும் விஷயம் புரியாமல் தலையை ஆட்டிக்கொண்டிருப்போம். இதில் உண்மை என்னவென்றால பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியானன் என்கிற வாயுவை வேப்ப மரம் வெளிப்படுத்தும். மற்ற நேரங்களில் பிராணவாயுவை வெளியிடும். அத்தகைய சிறப்பு வேப்ப மரத்துக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இந்த 11 மணியிலிருந்து 2 மணிக்குள் வேப்ப மரத்தின் அடியில் நின்றால் வியானன் அதிகமாக வெளிப்பட்டு பிராண வாயு தடை ஏற்படுவதால் மூச்சுத்திணறல், உடல் சோர்வு ஏற்பட்டு பலகீனமாக இருப்பார்கள். இதைத்தான் வேப்ப மரத்தின் அடியில் போனதால் பேய் அடித்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆகவே ஆரோக்கியமானவர்கள் உள்பட யாருமே இந்த காலகட்டத்தில் வேப்ப மரத்தின் அடியில் நிற்கக்கூடாது. மற்ற நேரங்களில் வேப்ப மரத்தின் அடியில் நின்றால் அதிலிருந்து வியான வாயு குறைந்து பிராண வாயு வெளிப்பட்டு சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும். இதுதான் உண்மை. அதற்காக வியானன் கெட்ட வாயு இல்லை, அது இல்லையென்றாலும் நோய்கள் நம்மை தாக்கும். அதுபற்றி வேறொரு நாள் பார்ப்போம். இது வெயில் நேரம். அம்மை வந்தால் வேப்பங்கொழுந்தையும், அதிமதுரப்பொடியையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு சிறு சிறு உருண்டைகளாக நிழலில் காய வைத்து தினமும் 3 வேளை ஒன்றிரண்டு மாத்திரை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். கை & கால், முதுகு பகுதியில் வலி ஏற்பட்டால் வேப்ப எண்ணெயுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். இதேபோல் கழுத்து வலி, வாத வலி உள்ளவர்களும், நுரையீரல் கோளாறு உள்ளவர்களும் வேப்ப எண்ணெயை சூடு பண்ணி தலைக்கு தேய்த்து சுடுதண்ணியில் குளித்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

Tuesday, March 4, 2014

கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது. துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும். இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல்கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும். பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு. Photo: காய்ச்சலை துரத்தும் கறிவேப்பிலை! கறிவேப்பிலை, கருவேப்பிலை... இது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். நம்ம வீடுகள்ல சமையல்ல கட்டாயம் கறிவேப்பிலை இருக்கும். ஆனா சாப்பிட உக்காந்த உடனே முதல் வேலையா கறிவேப்பிலையை தூக்கி தூர வச்சிட்டுதான் சாப்பிடுவோம். கறிவேப்பிலையில எவ்வளவு உயிர்ச்சத்து இருக்குங்கறது நமக்கு தெரியாது. வைட்டமின் ஏ, பி-1, பி-2, சி சத்துக்கள் மட்டுமில்லாம சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இருக்கு. கறிவேப்பிலையை துவையல் செஞ்சி சூடான சாதத்தோட சேர்த்து முதல் கவளத்தோட தினமும் சாப்பிட்டு வந்தா உடம்புக்கு பலம் கிடைக்கும். புது ரத்தம் ஊறும். பல்லும், எலும்பும் உறுதியாகும். கண், பல் சம்பந்தமான வியாதிகள் வராது. துவையல் எப்பிடி செய்யுறதுன்னு சிலபேர் கேக்குறாங்க. அப்பிடிப்பட்டவங்களுக்காக இதோ ஒரு டிப்ஸ். கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமாக எடுத்துக்கோங்க. கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, புளி எல்லாத்தையும் பச்சை வாசனை போற அளவுக்கு வதக்கி சூடு ஆறினதும் உப்பு சேர்த்து அம்மியில வச்சி மையா அரைச்சி சாப்பிட்டா அதோட பலனே தனிதான். ஒருநாள் ராத்திரி துவையல் சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் தாராளமா போறதோட வாயுத்தொல்லையும் விலகிப்போயிரும். இப்போவெல்லாம் காய்ச்சல் வந்து மக்களை பாடாப்படுத்துது. காய்ச்சலுக்கு புதுசு புதுசா பேரு வைக்கிறாங்க. அப்பிடி வரக்கூடிய காய்ச்சல் கை-கால்ல வலியை உண்டாக்குறதோட முடக்குவாதம் மாதிரி வந்து ஒரு வழி பண்ணுது. எது எப்பிடியோ எந்த மாதிரியான காய்ச்சல் வந்தாலும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுங்க, கொஞ்சம் சீரகம், அளவுல குறைச்சலா மிளகு சேர்த்து வெந்நீர் விட்டு மையா அரைச்சி எடுங்க. அதோட கொஞ்சம் இஞ்சிச்சாறும், தேனும் சேர்த்து சாப்பிடணும். கட்டியா இருக்குறதால கொஞ்சம் வெந்நீர் சேர்த்து குடிக்கலாம். காலையிலயும், சாயங்காலமுமா மூணு நாள் இதே மாதிரி சாப்பிட்டு வந்தா காய்ச்சல் வந்த இடம் பார்த்து போயிரும். பித்தத்தால் புத்தி மாறாட்டம் வந்தவங்களுக்கு கறிவேப்பிலையை துவையலா அரைச்சி எலுமிச்சை சாறு சேர்த்து சாதத்தோட சேர்த்து சாப்பிட்டா பைத்தியம் தெளிஞ்சிரும். இப்பிடி கறிவேப்பிலையால பல பலன்கள் இருக்கு.