எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Saturday, March 15, 2014


பேயை விரட்டுமா வேப்ப இலை? ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு வேப்ப மரம் இருக்கும். ஆனால் அதன் பலனை அறியாமல் நமக்கு வரும் நோய்களுக்காக எங்கெங்கோ சென்று காசை கரியாக்குவதோடு நம் உடம்பையும் கெடுத்துக்கொள்கிறோம். ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்பார்கள். ஆலம் விழுதைக்கொண்டு பல் துலக்குவதுபோல வேப்ப மரத்தின் குச்சியைக்கொண்டும் பல் துலக்குவார்கள். இதன்மூலம் பல் கோளாறுகள் நீங்குவதோடு பின்னாட்களில் பல்லில் பிரச்சினைகள் எதுவும் வராமல் தடுக்கப்படும். பேய் பிடித்தவர்களின் தலையில் வேப்ப இலையைக்கொண்டு அடிப்பார்கள். நாமும் விஷயம் புரியாமல் தலையை ஆட்டிக்கொண்டிருப்போம். இதில் உண்மை என்னவென்றால பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியானன் என்கிற வாயுவை வேப்ப மரம் வெளிப்படுத்தும். மற்ற நேரங்களில் பிராணவாயுவை வெளியிடும். அத்தகைய சிறப்பு வேப்ப மரத்துக்கு மட்டுமே உண்டு. எனவேதான் இந்த 11 மணியிலிருந்து 2 மணிக்குள் வேப்ப மரத்தின் அடியில் நின்றால் வியானன் அதிகமாக வெளிப்பட்டு பிராண வாயு தடை ஏற்படுவதால் மூச்சுத்திணறல், உடல் சோர்வு ஏற்பட்டு பலகீனமாக இருப்பார்கள். இதைத்தான் வேப்ப மரத்தின் அடியில் போனதால் பேய் அடித்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆகவே ஆரோக்கியமானவர்கள் உள்பட யாருமே இந்த காலகட்டத்தில் வேப்ப மரத்தின் அடியில் நிற்கக்கூடாது. மற்ற நேரங்களில் வேப்ப மரத்தின் அடியில் நின்றால் அதிலிருந்து வியான வாயு குறைந்து பிராண வாயு வெளிப்பட்டு சோர்வு நீங்கி ஆரோக்கியம் மேம்படும். இதுதான் உண்மை. அதற்காக வியானன் கெட்ட வாயு இல்லை, அது இல்லையென்றாலும் நோய்கள் நம்மை தாக்கும். அதுபற்றி வேறொரு நாள் பார்ப்போம். இது வெயில் நேரம். அம்மை வந்தால் வேப்பங்கொழுந்தையும், அதிமதுரப்பொடியையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு சிறு சிறு உருண்டைகளாக நிழலில் காய வைத்து தினமும் 3 வேளை ஒன்றிரண்டு மாத்திரை சாப்பிட்டு வந்தால் நோய் குணமாகும். கை & கால், முதுகு பகுதியில் வலி ஏற்பட்டால் வேப்ப எண்ணெயுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து கொதிக்க வைத்து பூசி வந்தால் குணம் கிடைக்கும். இதேபோல் கழுத்து வலி, வாத வலி உள்ளவர்களும், நுரையீரல் கோளாறு உள்ளவர்களும் வேப்ப எண்ணெயை சூடு பண்ணி தலைக்கு தேய்த்து சுடுதண்ணியில் குளித்து வந்தால் பிரச்சினைகள் தீரும்.

0 comments :

Post a Comment