எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Tuesday, May 21, 2013

பாரம்பரிய மருத்துவ தகவல்


வணக்கம். அகில இந்திய வானொலி புகழ் தென்கச்சி சுவாமிநாதன் சார் சொன்ன மாதிரி நானும் இன்று ஒரு தகவல் சொல்லலாம்னு நினைக்கிறேன். இதுல ஒரு சின்ன திருத்தம்... தினம் தினம் நமது 'பாரம்பரிய மருத்துவ தகவல்'னு திருத்திக்கோங்க அன்பர்களே!
அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுகள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோய்கள் வந்து மனிதர்களை பாடாய்படுத்தி வருகிறது. ஆனாலும் மனுஷன் போராடி அதில வெற்றியும், தோல்வியும் அடைஞ்சுட்டுருக்கான்.
நான், எனக்கு வந்த நோய் மற்றும் குறைபாடுகளுக்கு செய்து கொண்ட வைத்தியம் செஞ்சிக்குவேன். அதை சொல்றேன், அதோட பலனை நீங்களும் அனுபவியுங்க!
இது வெயில் காலம். வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்குள்ள நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டரை ‘மடக் மடக்’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையில நனையிறதுனாலயும், பூசணிக்காய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம். எதுஎப்படியோ? ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உள்ள வெந்நீரை (சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க. காலையில கண்முழிச்சதும் செய்யுங்க, ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செய்யுங்க போதும்.
அதுவே சளியா மாறிட்டா ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி பூண்டுப்பால் குடியுங்க. அதை எப்படி செய்றது... 50 மில்லி பால், அதே அளவு தண்ணி, 10, 12 பூண்டுப்பல் சேர்த்து கொதிக்க வையுங்க. பூண்டு வெந்ததும் 10 மிளகை பொடி பண்ணி போடுங்க. கூடவே மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க. கடைசியா பனங்கற்கண்டு சேர்த்து சூடு ஆறினதும் பருப்பு கடையுற மத்து மூலமா கடைஞ்சி குடியுங்க. பகல் உணவுல தூதுவேளை துவையல், சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, சரியாகிடும்

0 comments :

Post a Comment