எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Wednesday, May 29, 2013

பனஞ்சோறு சாப்பிட்டிருக்கீங்களா?

பனை என்றதும் ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது தென்னையை விதைச்சவன் தின்னுட்டு சாவான், பனையை விதைச்சவன் பாத்திட்டு சாவான்னு சொல்லுவாங்க. இதோட அர்த்தம் என்னன்னா தென்னை மரத்தை விதைச்சவன் அவனோட வாழ்நாள்ல தென்னை வளர்ந்து தேங்காயை பறிச்சி அதை அனுபவிப்பான். ஆனா பனை விதைச்சவன் அதுல நொங்கு (நுங்கு), பழம் எல்லாம் வர்றதுக்குள்ள அவன் வாழ்நாள் முடிஞ்சிடுமாம்.
எங்க ஊர்ல நிறைய பனைமரம் இருக்கு. எனக்கு பனை ஏறத்தெரியாது, ஆனா தென்னை மரம் ஏறுவேன். திருட்டுத்தனமா தென்னைமரம் ஏறி தேங்காய் பறிச்சி சாப்பிட்டதெல்லாம் தனிகதை. நண்பர்கள் ராத்திரி நேரத்துல பனைமரம் ஏறி நொங்கு வெட்டி போடுவாங்க. மரத்துக்கு கீழே உக்காந்து சாப்பிடுவோம்.
பனைமரத்தை வேரோட வெட்டி சாய்ச்சதும் அதை ரெண்டா பிளந்து போடுவாங்க. அதுக்கு நடுவுல உள்ள பகுதி வெள்ளை, மஞ்சள் கலந்த நிறத்துல இருக்கும். அதை பனஞ்சோறுனு சொல்வாங்க. சாப்பிட நல்லா இருக்கும். அதை சாப்பிடுறதுக்காக காத்துக்கிடப்போம், அதை சவைச்சி (மென்று) சக்கையை துப்பிட்டு சாறை மட்டும் விழுங்கணும். நல்ல டேஸ்டா இருக்கும். இன்னொரு பக்கம் கழுதை நிக்கும். கழுதை விடிய விடிய சாப்பிடும்.
இதை சாப்பிடுறதால என்ன பயன்னு நீங்க கேக்கலாம், பொதுவா பனைவெல்லம் பனங்கற்கண்டுக்கு நிறைய மருத்துவ குணம் இருக்கு. 40 நாள் தொடர்ந்து பதநீர் குடிச்சிட்டு வந்தா மேகநோய் சரியாகும் கள்ளை அளவோட குடிச்சிட்டு வந்தா உடம்புக்கு நல்லது ஆண்மைக்குறை உள்ளவங்க சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும். நொங்கு சாப்பிட்டா வியர்க்குரு வராது. இப்பிடி நிறைய மருத்துவ குணம் இருக்கு.

0 comments :

Post a Comment