எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Wednesday, May 22, 2013

குழந்தைப்பேறு தரும் அரச மரம்...

தென்கச்சி அண்ணாச்சி சொன்னமாதிரி தினம் ஒரு தகவல் சொல்றதா சொன்னேன். இதோ இன்றைய தகவல்!
இயற்கை மாற்றமெல்லாம் வினோதமா இருக்கும். அதை அனுபவிச்சி பார்த்தாதான் தெரியும். நானும் இதுவரை அந்த வினோதத்தை பெருசா உணரல.. இப்போ வாய்ப்பு கிடைச்ச‌து, பார்த்தேன் வியந்தேன்.
ஏப்ரல் கடைசி மே தொடக்கத்துல நிறைய‌ அரச மரங்கள் இலை உதிர்ந்துபோய் மொட்டை மரமா நின்ன‌து. பிறகு சில நாட்கள்ல இலை துளிர்த்து இளம்பச்சையா இருந்திச்சி. இப்போ அந்த இலையெல்லாம் பச்சை பசேல்னு வளர்ந்திருக்கு. சில மரங்கள்ல‌ காய் காய்ச்சி பழமாகியிருக்கு. என்னடா இது வினோதம்னு நீங்க நினைக்கலாம். இதுக்குள்ள நிறைய விஷயங்கள் இருக்கு..... நான் அதுக்குள்ள போகலை. இலை துளிர்த்ததா சொன்னேனே! அந்த பசுமையான இலைகளைத்தேடி நான் அலைஞ்சிருக்கேன். ஏன்னு கேக்கிறீங்களா? சொல்றேன்... ஆண்மைக்குறை போக்குறதோட குழந்தைப்பேறு தரக்கூடிய‌ அற்புத மருந்து அந்த இளம்தளிர் இலைகள்.
இப்போவெல்லாம் குழந்தை இல்லாம சிரமப்படுறவங்களை அதிகமா பார்க்க‌ முடியுது. (உணவுமுறை, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.) குழந்தையில்லாம கஷ்டப்படுறவங்க இந்த இளம்தளிர் இலைகளை தயிர் சேர்த்து அரைச்சி காலையில‌ வெறும் வயித்துல‌ 48 நாள் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். ஆண், பெண் ரெண்டு பேருமே சாப்பிடணும். இந்த காலகட்டத்துல‌ உறவு வேண்டாம்.. 48 நாள் ஆனாதான் நல்ல பலன் கிடைக்கும்... ஆமா சொல்லிப்புட்டேன்.
இதை வச்சிதான் ஒரு பழமொழி சொல்வாங்க. அரசனை நம்பி புருஷனை கைவிடாதே!
இது நாம தவறா புரிஞ்சிக்கிட்ட‌ பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'னு சொல்றது.
ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்றதா அமைஞ்சிருக்கு. இதோட‌ விரிவான அர்த்தம் என்னன்னா?
''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!''

இப்படி அர்த்தப்படுத்திக்கிட்டுதான் ஒரு கவிஞர் பழைய படத்துல‌ பாட்டு எழுதியிருந்திருந்தார்.
இப்படிப் பொருள் கொள்ற‌து, பெண்ணை இழிவுபடுத்துது; அவளின் கற்பையே சந்தேக‌ப்பட வைக்கிற‌து; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது.

இங்கே நாம் சொல்ல வர்றது என்னன்னா... அரசன்னா மன்னனைக் குறிக்கலை; மரத்தைச் குறிக்குது.
குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுத்தி வந்தா கருத்தரிக்கும்கிறது நம்பிக்கை.
அரச இலையை சாப்பிட்டாதான் பலன் கிடைக்கும்னு இல்லை. இந்துக்கோவில்கள்ல‌ உள்ள அரச மரத்தை பொண்ணுங்க‌ சுத்தி வந்தாலே அதோட‌ காத்து பட்டு பொண்ணுங்களோட‌ கருப்பைக்கோளாறு நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்னு சொல்றாங்க..
ஆக அரச மரத்துக்கு எவ்வளவு சக்தி இருக்குது பார்த்தீங்களா?

2 comments :

  1. Replies
    1. வணக்கம். மன்னிக்கவும்... வலைப்பதிவு பக்கம் வந்து பலநாள் ஆகுது. அதனால் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியல. பொதுவா 100 மில்லி அளவு இல்லைனா அதுக்கும் குறைவா குடிச்சா போதும்.

      Delete