எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது

மாலை வணக்கம் ---

தீதும் நன்றம் பிறர்தர வாரா

சமூகக் குற்றங்களைக் களைவோம்

டிஜிட்டலுக்கு மாறும் உலகம்

இனி எல்லாமே டிஜிட்டல் உலகம் தான். அதில் நாம் முன்னேறுவதைக் குறித்து யோசிப்போம்.

நல்லதை செய்வோம் அதை இன்றே செய்வோம்

Sunday, February 20, 2011

இது ஒரு நல்ல நிகழ்வு!

சில நேரங்கள்ல சில நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது மனசுக்கு மகிழ்வா இருக்கு. ஒரு பொண்ணுக்கு வருஷக்கணக்கா மாதவிடாய்க்கோளாறு இருக்குன்னு சொன்னாங்க. அதாவது மாதவிலக்கு வர்றதே இல்லைன்னு சொன்னாங்க. இந்த பிரச்சினைக்காக ஆங்கில (அலோபதி) மருத்துவம் எடுத்திருக்காங்க. அங்க நடந்தது என்னன்னா... ஒரு மகப்பேறு மருத்துவர்கிட்ட அந்தப்பொண்ணு சிகிச்சை எடுத்திருக்காங்க. சிலநாட்கள்ல‌ மாதவிடாய் வந்ததாம், ஆனா நிக்காம வந்துக்கிட்டே இருந்ததாம். ஆக‌ ரத்தப்போக்கு நிக்குறதுக்கு வேற‌ மருந்து கொடுத்தாங்களாம். அலோபதி மருத்துவத்தோட மகிமை இவ்வளவுதான். இதுக்காக டாக்டரை குறை சொல்லலை. அந்த மருத்துவத்தின் தன்மை அவ்வளவே.அந்தப்பொண்ணு என்கிட்ட சொன்னதும் நான் ஒரு மருந்து தயார் பண்ணிக்கொடுத்தேன். மூணு நாள் சாப்பிட்டாங்க. அதுக்கு அப்புறமா பதிலே இல்லை. பிறகு ஒரு வாரம் கழிச்சி அந்தப்பொண்ணுக்கு மாதவிலக்கு ஒழுங்கானது. இதை தமிழ் வைத்தியத்துல சூதகக்கோளாறுன்னு சொல்வாங்க. இப்டியெல்லாம் நம்ம பாரம்பரிய வைத்தியத்துல நல்ல நல்ல சிகிச்சைகள் இருக்குது. ஆனா பாருங்க... நம்ம மக்களுக்கு சித்தா, மூலிகை, ஆயுர்வேதிக் போன்ற வைத்தியங்கள்ல நம்பிக்கையே கிடையாது. உடனே சரியாகணும்னு நினைக்கிறது தப்பு மக்களே தப்பு. சில நாட்கள் அவகாசம் வேணும், அதோட தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா நிச்சயம் பரிபூரண பலன் கிடைக்கும்

Tuesday, February 1, 2011

முன்னேற்ற பாதையில்......மூலிகை!

2011. ரெண்டாயிரத்து  பதினொன்று எனக்கு நல்லதொரு வருஷமா இருக்குறதா நம்புறேன். பொதுவாவே இந்த வருஷம் சரியில்லை, அந்த வருஷம் சரியில்லைன்னு ஜோஷியக்காரன்களும், சில மூடநம்பிக்கை பேர்வழிகளும் சொல்றத கேட்டிருக்கேன். சில நிகழ்வுகள் நடக்குறதால‌ வருஷம் சரியில்லை, நேரம் சரியில்லைன்னு சொல்றது எந்த அளவுக்கு சரின்னு எனக்கு தெரியலை. எல்லாமே நம்ம கையிலதான் இருக்கு.
சரி அது இருக்கட்டும். நம்ம வைத்தியத்துல நல்ல முன்னேற்றம். நான் சொல்றத சரியா செய்றவங்களுக்கு அவங்களோட பிரச்சினைகள் சரியாகுது. ஒழுங்கா பாலோ பண்ணாதவங்களுக்கு சரியான பலன் தர்றதில்லை. 5 நாளைக்கு முன்னாடி அதிரசம், முறுக்கு விக்குற ஒரு அம்மா காலை இழுத்து இழுத்து நடந்து வந்தாங்க. (அந்த அம்மாவுக்கு வயசு ஒண்ணும் அதிகமில்லை. ஐம்பது வயசு இருக்கும்.) என்ன பண்ணுதுன்னு கேட்டேன். இடுப்பு வலின்னு சொன்னாங்க. இடுப்பு வலி வர்றதுக்கு காரணம் சுகர் அதிகமாயிட்டுனு டாக்டர் சொன்னாராம். இப்போ இடுப்புவலிக்காக அடிக்கடி போய் ஊசி போட்டுட்டு வர்றதா சொன்னாங்க. உடனே அவங்ககிட்ட சொன்னேன், தினமும் நெல்லிக்காயையும், பாகற்காயையும் தனித்தனியா ஜூஸ் எடுத்து 10, 10 மில்லி காலைல வெறும் வயித்துல சாப்பிடச்சொன்னேன். ரெண்டு நாள் சாப்பிட்டுட்டு  சர்க்கரையோட அளவை டெஸ்ட் பண்ணி பாத்தாங்களாம். 35 குறைஞ்சிருக்குனு டாக்டர் சொன்னதா அவங்க சொன்னாங்க. நெல்லி, பாகல் ஜூஸ் சாப்பிடறதுக்கு முந்தின நாள்தான் டெஸ்ட் பண்ணி பாத்திருக்காங்க. அதனால அவங்களால இதை சொல்ல முடிஞ்சது. ஆனாலும் இடுப்புவலிதான் சரியாக மாட்டேங்குதுனு வருத்தப்பட்டாங்க. முதல்ல இதை (நீரிழிவு) சரி பண்ணிட்டு இடுப்பு வலியை சரி பண்ணலாம்னு சொன்னேன்.
இந்த அம்மாவைப்போலவே என்னோட வேலை பார்க்குற ஒருத்தரோட மாமியாருக்கும் இந்த வைத்தியத்தை சொன்னேன். ரெண்டே நாள்ல மாற்றம் தெரிஞ்சதா சொன்னாங்க. அதாவது ஒரே டென்ஷனா இருக்குமாம். இப்போ அதில இருந்து விடுதலை கிடைச்சதா சொன்னாங்க. நல்ல முன்னேற்றம்தான். இதுக்கெல்லாம் நான் நயா பைசா வாங்கலைங்கிறத இங்க பதிவு பண்ண விரும்புறேன். நான் சொன்னதை அவங்க செஞ்சாங்க அவ்ளோதான். ஏன் சொல்றேன்னா நிறைய மக்கள் பல்வேறுவிதமான நோய்களால கஷ்டப்படுறாங்க, அதில இருந்து விடுதலை கிடைக்கணும். நம்ம பாரம்பரிய வைத்தியத்தை எல்லோரும் கடைபிடிக்கணும். என்னோட இந்த மூலிகை மருத்துவ முயற்சிக்கு உங்களால முடிஞ்சா உதவுங்க! என்ன மாதிரி உதவின்னு கேட்டீங்கன்னா... உங்க பாக்கெட்டுல இருந்து ஒரு பைசா கேட்கமாட்டேன். ஆனாலும் பணம் தேவை. பரவலாக்க நிதி தேவை, வங்கிக்கடன். அதற்கு முடிந்தால் சரியான ஆளை காட்டுங்கள். நன்றி!