எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Sunday, February 20, 2011

இது ஒரு நல்ல நிகழ்வு!

சில நேரங்கள்ல சில நல்ல நிகழ்வுகள் நடக்கும்போது மனசுக்கு மகிழ்வா இருக்கு. ஒரு பொண்ணுக்கு வருஷக்கணக்கா மாதவிடாய்க்கோளாறு இருக்குன்னு சொன்னாங்க. அதாவது மாதவிலக்கு வர்றதே இல்லைன்னு சொன்னாங்க. இந்த பிரச்சினைக்காக ஆங்கில (அலோபதி) மருத்துவம் எடுத்திருக்காங்க. அங்க நடந்தது என்னன்னா... ஒரு மகப்பேறு மருத்துவர்கிட்ட அந்தப்பொண்ணு சிகிச்சை எடுத்திருக்காங்க. சிலநாட்கள்ல‌ மாதவிடாய் வந்ததாம், ஆனா நிக்காம வந்துக்கிட்டே இருந்ததாம். ஆக‌ ரத்தப்போக்கு நிக்குறதுக்கு வேற‌ மருந்து கொடுத்தாங்களாம். அலோபதி மருத்துவத்தோட மகிமை இவ்வளவுதான். இதுக்காக டாக்டரை குறை சொல்லலை. அந்த மருத்துவத்தின் தன்மை அவ்வளவே.அந்தப்பொண்ணு என்கிட்ட சொன்னதும் நான் ஒரு மருந்து தயார் பண்ணிக்கொடுத்தேன். மூணு நாள் சாப்பிட்டாங்க. அதுக்கு அப்புறமா பதிலே இல்லை. பிறகு ஒரு வாரம் கழிச்சி அந்தப்பொண்ணுக்கு மாதவிலக்கு ஒழுங்கானது. இதை தமிழ் வைத்தியத்துல சூதகக்கோளாறுன்னு சொல்வாங்க. இப்டியெல்லாம் நம்ம பாரம்பரிய வைத்தியத்துல நல்ல நல்ல சிகிச்சைகள் இருக்குது. ஆனா பாருங்க... நம்ம மக்களுக்கு சித்தா, மூலிகை, ஆயுர்வேதிக் போன்ற வைத்தியங்கள்ல நம்பிக்கையே கிடையாது. உடனே சரியாகணும்னு நினைக்கிறது தப்பு மக்களே தப்பு. சில நாட்கள் அவகாசம் வேணும், அதோட தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா நிச்சயம் பரிபூரண பலன் கிடைக்கும்

0 comments :

Post a Comment