எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, May 23, 2013

நீரிழிவு நீக்கும் சரக்கொன்றை!

இயற்கையோட வினோதத்தை நேத்து சொல்லியிருந்தேன். இன்னைக்கு ஒரு வினோதம் சொல்றேன் (இதெல்லாம் ஒரு வினோதமாப்பான்னு நீங்க சொல்றது என் காதுல கேக்குது). இன்னைக்கி நான் சொல்லப்போறது சரக்கொன்றை பற்றி... இதை சித்திரைப்பூன்னு சொல்வாங்க. நான் வசிக்கிற மாதவரம் பால்பண்ணை பகுதியில ஒரு சரக்கொன்றை மரம் இருக்கு வழக்கமா சித்திரை மாசத்துல அந்த மரத்துல பூ பூத்துக்குலுங்கும், ஆனா இந்த மே தொடக்கத்துல அந்த மரம் மொட்டை மரமா இருந்திச்சி. ஆனா மே மாசம் நடுவுல... அதாவது சித்திரையில பூ பூத்தது, கூடவே இலைகளும் தளிர் விட்டிச்சி. இப்போ மரம் இலைகளும், பூவுமா ரம்மியமா இருக்கு.
இந்த சரக்கொன்றையோட அம்மா கொன்றை. அதோட வம்சத்துல சிறுகொன்றை, செங்கொன்றை, மயில்கொன்றைனு நிறையபேர் இருக்காங்க. உலகம் முழுக்க இந்த கொன்றையோட ஆதிக்கம் உண்டு. கொன்றை மலர் பத்தி நம்ம தமிழ் இலக்கியத்துல நிறையவே சொல்லியிருக்காங்க! கொன்றை மலர் சூடினு ஒரு பாட்டு பாடப்புத்தகத்துல படிச்சிருப்போம். சிவனோட செஞ்சடையில இந்த கொன்றை மலரைத்தான் அணிஞ்சிருந்தாராம்.
சரி விஷயத்துக்கு வருவோம். சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செஞ்சி சாப்பிடலாம், பூவை கஷாயம் செஞ்சி சாப்பிடலாம் இப்பிடி சாப்பிட்டு வந்தா சர்க்கரை வியாதி சரியாகும் கூடவே வயித்துக்கோளாறு, மேகக்கோளாறும் சரியாகும். சரக்கொன்றை காய் புளியம்பழம் மாதிரி ஆனா... நீளமா இருக்கும் அதுக்குள்ளே உள்ள சதைப்பற்றை வாம சமையல்ல சேர்க்கிற புளி கூட சேர்த்து பயன்படுத்தினா பித்தம் சரியாகும். குழந்தைங்க, கர்ப்பிணி பொண்ணுங்க சாப்பிட்டா மலப்பிரச்சினை சரியாகும். இன்னும் நிறைய இருக்கு.

2 comments :

  1. சரக்கொன்றை புளி எங்க கிடைக்கும். Kindly give details. Mob.6381629108

    ReplyDelete