எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Thursday, May 23, 2013

பசியைத்தூண்டும் மஞ்சணத்தி... பித்தம் தணிக்கும் வேப்பம்பழ சர்பத்!


நாங்க... சின்ன வயசுல எப்பிடியெல்லாம் இருந்தோம்னு சிலபேரு ஒரு இழுவையைப்போட்டு பராக்கிரமத்தை சொல்வாங்க. அதுல சிலது உண்மையா இருக்கும், சிலது கதையாவும் இருக்கும். இங்கே சில நிதர்சனங்களை சொல்ல விரும்புறேன். திருநெல்வேலி மாவட்டத்துல பீடிக்கு பேர்போன ஊரான முக்கூடல்ங்கிற ஊருக்குப்பக்கத்துல என் ஊரு இருக்கு. மரங்கள் நிறைய இருக்கும். அதுவும் என் தாத்தா காலத்துல வீட்டைச்சுத்தி ஒரே மரமா இருக்கும். வெயில் காலத்துல வேப்ப மரத்துல ஏறி வேப்பம்பழத்தை பறிச்சி சாப்பிடுவோம். விளையாட்டுத்தனமா சாப்பிடுவோம், அவ்வளவுதான்! (ஏல (வேப்பம்பழத்தை) ரொம்ப சாப்பிடாத... கண்வலி வந்திரும்னு பெரியவங்க சொல்வாங்க, அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே?)
வேப்பம்பழத்தோட விதை வேப்பமுத்து. இந்த விதை நல்ல விலைக்கு போகும். அதனால விதையை பொறுக்கி மொத்தமா சேர்த்து விப்போம். கைச்செலவுக்கு ஆகுறதோட ஜூன் மாசம் பள்ளிக்கூடம் போகும்போது நோட்டு புத்தகம் வாங்குறதும் பணம் சேரும்.
வேப்பம்பழத்தை சர்பத் செஞ்சி சாப்பிட்டா பித்தம் தணியும், ரத்தத்தை சுத்திகரிக்கும். கொஞ்சநாள் தொடர்ந்து சாப்பிட்டா சொறி சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் சரியாகும்.
வேப்பம்பழம் மாதிரியே மஞ்சணத்தி பழத்தையும் சாப்பிடுவோம். அது கோழிப்பீ (கோழியோட கழிவு) மாதிரி இருக்கும், வாசனைகூட அப்பிடித்தான் இருக்கும். இந்த மாதிரி பழங்களை இப்ப உள்ள பிள்ளைங்க சாப்பிட மாட்டாங்க. இப்போ நோனினு சொல்லி விக்கிறாங்களே... அதோட குடும்பம்தான் இந்த நுணானு சொல்லக்கூடிய மஞ்சணத்தி.
இது பசியை வரவழைக்கிறதோட உடல்ல வெப்பத்தை தணிச்சி மாந்தத்தை போக்கி கல்லீரல், மண்ணீரல் கோளாறையெல்லாம் சரி பண்ணும். அதேமாதிரி நுணாக்காய்ல பல்பொடி செஞ்சி தேய்ச்சா பல் பளிச்னு இருக்கும். அதோட பல் அரணை, வீக்கம், ரத்தக்கசிவு எல்லாம் சரியாகும். நான் மூணு மாசத்துக்கு முன்னாடி இந்த நுணாக்காயை (மஞ்சணத்தி) தேடி கண்டுபிடிச்சி ஒரு கிலோ அளவுக்கு பறிச்சிட்டு வந்து பல்பொடியாக்கி நிறையபேருக்கு கொடுத்தேன். நானும் என் வீட்டுல என் பிள்ளைங்கள பயன்படுத்தச்சொன்னேன். தேவைப்பட்டா நான் செஞ்சி தர தயாராயிருக்கேன்.

0 comments :

Post a Comment