எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Friday, May 11, 2012

ஒரு வருத்தமான  பதிவு
(ரொம்ப நாளா பிளாக் பக்கம் போகலையேன்னு ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு மேட்டரை எழுதி போஸ்ட் பண்ணினேன். ஆனா அது டிராப்ட்ல போய் நின்னுட்டு. அதை இப்போதான் தேடி கண்டுபிடிச்சி இங்க போஸ்ட் பண்ணியிருக்கேன். படிங்க... அது ஒரு வருத்தமான  பதிவு. )
வணக்கம்.
என்னோட இந்த பிளாக் பக்கம் நான் போய் பல மாதங்கள் ஆகிறது. எல்லாம் நேரமின்மைதான்... இனிமே எழுதலாம்னு நினைக்கிறேன். சரி இப்போ ஏன் இந்த திடீர் ஞானோதயம்(?)னு நீங்க கேட்கலாம். நண்பர் ஒருத்தர் (வயதில் மூத்தவர்) திடீர்னு இறந்துவிட்டார். காரணம் சுகவீனம். அவருக்கு சில உடல் உபாதைகளுக்காக என்னிடம் இயற்கை வைத்தியம் பற்றி கேட்டார். நானும் சொன்னேன். ஆனால் அவருக்கு மஞ்சள்காமாலை  இருந்திருக்கிறது. இதன்காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு அதுதெரியாமலே இருந்துவிட்டார். கடைசியில் மரணம். சிலபேர் உடம்புல லேசா பிரச்சினை வந்தாலே டாக்டர்கிட்ட போயிருவாங்க. இன்னும் சிலபேர் அவர்களே  டாக்டராகி எதையாவது வாயில் போட்டுக்கொள்வார்கள். வேறுசிலரோ எதையும் கண்டுகொள்வதில்லை. ஒவ்வொருவரும் ஒரு ரகம். ஆனால் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் அக்கறையோடு இருக்க வேண்டும். அது சாப்பாடு முதற்கொண்டு சிகிச்சை வரை எல்லாவற்றிலும் கவனம் தேவை. இன்றைய சூழலில் அலோபதி மருத்துவத்தில் ஓவர்டோஸ் மாத்திரைகள்தான் தரப்படுகிறது. எனவே இயற்கை மற்றும் மூலிகை வைத்தியத்தில் சரி செய்ய பழகிக்கொள்ளுங்கள்.  தேவைப்படும் பட்சத்தில் அலோபதி முறையை நாடலாம். அறுவை சிகிச்சைக்கு  அலோபதிதான். மற்றபடி எல்லாமே மூலிகை வைத்தியத்தில் இருக்கிறது. அதன் மகிமை  ஏனோ  பலருக்கு தெரியவில்லை. அதன் பலனை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.

0 comments :

Post a Comment