எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Sunday, February 2, 2014

ஹார்ஸ் பவர் தரும் கேரட்! குதிரைக்கு மிக முக்கிய உணவாக புல்லும், கொள்ளும், கேரட்டும் கொடுக்கப்படுகிறது. குதிரையின் சக்தியை ‘ஹார்ஸ் பவர்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அத்தகைய சக்தி மனிதனுக்கும் கிடைக்க வேண்டுமானால் கொள்ளு துவையலும், கேரட் பச்சடியும் சாப்பிடுவது நல்லது. வைட்டமின் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய கரோட்டின் என்னும் மூலப்பொருள் ஆரஞ்சு நிற கேரட்டில் உள்ளது. எனவே நம் ஒவ்வொருவருக்கும் கேரட் மிக நல்ல உணவாகும். கேரட்டை பச்சடியாக மட்டுமல்லாமல், ஜூஸாகவோ, அல்வா செய்தோ வெறுமனே பச்சையாகவோ சாப்பிட்டு வரலாம். கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். கேரட்டை துருவி உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் எக்சிமா என்று சொல்லக்கூடிய தோல் நோய் குணமாகும். டோகோகிளின் என்ற ஹார்மோன் கேரட்டில் உள்ளது. இது இன்சுலினை போன்றது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்ல உணவாகும். குடல் நோய்கள், மூட்டு வலி, கல்லீரல் நோய்களுக்கும் கேரட் நல்லது. மேலும் மலட்டுத்தன்மையை போக்கக்கூடியது. புற்றுநோய் செல்களை ரத்தத்தில் வாழ விடாமல் செய்யக்கூடியது. அதுமட்டுமல்ல புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது கேரட். கண் பார்வைக்கும் மிக நல்லது. எனவே அவ்வப்போது கேரட் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். கேரட்டை துருவிப்போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்புடன் தயிர் சேர்த்து பச்சடியாக சாப்பிடலாம். தயிர் சேர்த்த இந்த பச்சடியை கோழி, ஆடு போன்றவற்றின் உணவுகளை சாப்பிடும்போது சாப்பிடக்கூடாது. பலர் ருசிக்காக இப்படித்தான் சாப்பிடுகிறார்கள். இப்படி சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் வெள்ளை விழுதல் என்று சொல்லக்கூடிய வெண் தேமல், வெண்குஷ்டம் வர வாய்ப்பு இருக்கிறது. எனவே நாம் உண்ணும் உணவில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

0 comments :

Post a Comment