எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Friday, February 21, 2014


வயிற்றுவலி விரட்டும் புதினா! புதினாவோட மகிமை எத்தனைபேருக்கு தெரியும், சொல்லுங்க. ஏதோ வாசனைக்காக கறிக்குழம்புல பேருக்குகொஞ்சமா சேர்ப்போம், அவ்வளவுதான். ஆனா புதினா நல்ல மருந்து. முக்கியமா பச்சக்குழந்தைங்க வயித்துவலியால அவதிப்படும்போது ‘வீல் வீல்’னு கத்தும். இந்த மாதிரி நேரங்கள்ல 10 புதினா இலைகளை எடுத்து சட்டியில போட்டு வதக்குங்க. (வெறுமனே வதக்கணும், எண்ணெய் ஊத்த வேண்டாம்) பிறகு 50 மில்லி அளவு தண்ணிய வதக்கின புதினாவோட ஊத்தி காய்ச்சணும். தண்ணி வத்தி சூடு ஆறுனதும் காலைலயும், மத்தியானமும், சாயங்காலமும் சங்குல (பாலாடை) ஊத்தி குடுத்தா வயிறுவலி போறதோட வாந்தி, வயித்துப்போக்கு, ஜீரணக்கோளாறுனு வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சினைகளும் சரியாகிடும். இந்த புதினா கசாயம் குழந்தைகளுக்கு மட்டுமில்ல... பெரியவங்களுக்கு வரக்கூடிய வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு கைமேல பலன் தரும். ஏன்... பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு வரக்கூடிய நேரங்கள்ல வரக்கூடிய வயித்துவலிக்கும் இதே கசாயம் சூப்பர் மருந்து. துவையலா செஞ்சி சாப்பிட்டாலும்கூட இதே பிரச்சினை சரியாகும். புதினாவை கசாயமாவோ, சூப்பாவோ, துவையலாவோ செஞ்சி சாப்பிட்டு வந்தா வயிறு பிரச்சினைகளோட இருதய சம்பந்தமான நோய்களும் சரியாகும். புதினாவை வெறுமனே இல்லாம கறிவேப்பிலை, கொத்தமல்லி கீரையோட சேர்த்து வதக்கி துவையல் செஞ்சி சாப்பிட்டா கூடுதல் மருத்துவக்குணம் கிடைக்கும். மத்தபடி புதினாக்கீரையில பல்பொடி செஞ்சி பல் விளக்கினா பல் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளும் சரியாகும். புதினாவுல பல்பொடியான்னு நீங்க கேக்கலாம், சொல்றேன். புதினாவை சுத்தம் பார்த்து தண்ணியில கழுவி வெயில்ல நல்லா காய வைங்க. காய்ஞ்சு சருகான புதினாவை லேசா வதக்கி அதுல 8 பங்கு எடுத்துக்கோங்க... அதோட ஒரு பங்கு உப்பை சேர்த்து பொடியாக்கி பல் தேய்ச்சிட்டு வந்தா பல் பளிச்சின்னு ஆயிரும். என்ன புதினா வாங்க கிளம்பிட்டீங்களா?

0 comments :

Post a Comment